200 குடும்பங்களுக்கு உதவி

Uncategorized

 389 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள காரை, கம்போங் பெங்காளி, கம்போங் சுங்கை பூலோ, கம்போங் தெர்சூசூன் கமுனிங், சிம்பாங் ஜாலோங் , தாமான் லிந்தாங், சுங்கை பெலாந்தோக், தாமான் டோவென்பி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி தொழில்திறன் மேம்பாட்டு வாரியத்தின் தலைமை அதிகாரி முகமட் பஃதுல்லா இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பேரா மாநில சஹாபாட் இயக்கம், ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி கூறிய அவர் இங்குள்ள இளைஞர்களுக்குத் தொழில்திறன் பயிற்சிகள் வழங்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி தொழில்திறன் மேம்பாட்டு வாரியத்தின் துணைத்தலைவர் டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன், வாரிய உறுப்பினர் டத்தோ பி. அமரேந்திரன், பேரா மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ வ. இளங்கோ, பேரா மாநில சஹாபாட் இயக்கத்தலைவர் ராஜ்குமார், சஹாபாட் சுங்கை சிப்புட் தலைவர் அசோக் குமார், மின்சார வாரிய உறுப்பினர் டத்தோ ரவிச்சந்திரன்,  சுங்கை சிப்புட் ம.இ.கா. தொகுதி செயலாளர் கி. மணிமாறன் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply