2008ஐ காட்டிலும் இன்னும் அதிகமான விழிப்புணர்வை இந்திய சமுதாயம் பெற வேண்டும்- சிவநேசன்

Malaysia, News, Politics

 84 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ-

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில்  இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று சுங்காய் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

1957இல் இருந்து 60 ஆண்டுகளாக தேசிய முன்னணியே ஆட்சியில் இருந்து வந்தது. 2008க்கு முன்புவரை எதிர்க்கட்சியாக கிளந்தான் மாநிலம் மட்டுமே இருந்து வந்தது. 2008இல் நிகழ்ந்த தேர்தலில் ஐந்து மாநிலங்களை எதிர்க்கட்சி தக்க வைத்து கொண்டது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் 2018இல் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றியது.

வரும்15ஆவது பொதுத் தேர்தல் இந்திய சமுதாயத்திற்கு மிக முக்கியமான தேர்தலாகும். இந்திய சமுதாயத்தின் பொருளாதாரம் 3 விழுக்காடாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி 2007இல் கூறினார்.  2010க்குள் இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை 7 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று கூறினார். ஆனால் அவர் சொல்லி 10 ஆண்டுகளை கடந்த பின்னர் இந்திய சமுதாயத்தின் பொருளாதாரம் 3 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது என்று மஇகாவே இப்போது கூறுகிறது.

22 மாதங்களில் மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்திட விட முடியாது என்று கூறிய சிவநேசன், இன்னமும் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் இந்திய சமுதாயம் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும்.

ஆதலால் இந்திய சமுதாயம் இந்த தேர்தலில் மிக விழிப்புடன் செயல்பட வேண்டும். தங்களது வாழ்வாதாரம், பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய சமுதாயம் வாக்களிக்க வேண்டும் என்று சிவநேசன் தெரிவித்தார்.

விளம்பரம்

Leave a Reply