2018இல் நஜிப் போட்டியிட வில்லை என்றால் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருக்கும் ! – சரவணன்

Malaysia, News, Politics, Polls

 73 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 14/11/2022

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த நாட்டின் 14வது பொதுத் தேர்தலின்போது நஜிப் இரசாக் அத்தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தேசிய முன்னணி வெற்றீ பெற்று ஆட்சி அமைத்திருக்கக் கூடும் என்றார் டத்தோ ஶ்ரீ மு சரவணன்.

ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவரான அவர் கூறுகயில், அப்போதைய நிலையில் தேசிய முன்னணிக்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு கிடைக்கப்பெறாததற்கு நஜிப்பின் மீதான குற்றச் சாட்டுகளும் அவருக்கு ஏற்பட்டக் களங்கமும் முக்கியக் காரணங்களாக அமைந்து விட்டன.

மேலும், சிவப்பு அடையாள அட்டை, குடியுரிமை பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படும் என நம்பிக்கைக் கூட்டணி வழங்கிய வெற்று வாக்குறுதிகளை நம்பி இந்திய சமுதாயத்தின் ஆதரவு திசை மாறியது என்றார்.

கடந்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைத்த 22 மாதங்களில் அவர்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை.

அதே சமயம், அரசாங்கத்தில் அகற்றப்பட வேண்டிய நிறைய குப்பைகள் அதிகம் இருந்ததாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றை உருவாக்கியதே அக்கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்த மகாதீர்தான் என தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேசிய முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கும் டத்தோ ஶ்ரீ சரவணன் சுட்டிக் காட்டினார்.

இருந்தபோதிலும், ஜோகூர், மலாக்கா மாநிலத் தேர்தல்களில் இந்திய சமுதாயத்தின் ஆதரவு மீண்டும் நம்பிக்கைக் கூட்டணியின் பக்கம் திரும்பியதையும் டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.  

Leave a Reply