259 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிநிதி- கணபதிராவ்

Malaysia, News

 154 total views,  1 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில அரசின் உயர்கல்வி மாணவர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான கல்விநிதியுதவியை பெறுவதற்கு 259 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

912,975.00 வெள்ளியை உள்ளடக்கிய இவ்வாண்டுக்கான முதற்கட்ட உயர்கல்வி உதவிநிதியில் IPTA எனப்படும் அரசு உயர்நிலை கூடங்களிலும் IPTS எனப்படும் தனியார் உயர்நிலைக்கூடங்களிலும் பயிலும் இளநிலை (Degree) மாணவர்கள் 199 பேருக்கும் டிப்ளோமா படிப்பை மேற்கொள்ளும் 60 மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட உயர்கல்வி உதவிநிதி திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 259 மாணவர்களும் இன்று (3/8/2021) தொடங்கி 3 நாட்களுக்குள் அரசு செயலகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் அவர்களுக்கான காசோலையை பெற்றுக் கொள்ளலாம்.

68,000 வெள்ளி மதிப்பிலான இரண்டாம் கட்ட கல்வி உதவிநிதி விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் 21 மாணவர்களுக்கான கல்வி உதவிநிதி கூடிய விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Leave a Reply