3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்கத் தயார் ! – துன் மகாதீர்

Malaysia, News, Politics, Polls

 97 total views,  2 views today

இரா. தங்கமணி

கோலாலம்பூர் – 24 செப் 2022

வேறு தேர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க தாம் தயார் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

இம்முறை ஒரு தவணை முழுமைக்கும் அப்பதவியை ஏற்காமல் ஓராண்டுக்கு மட்டுமே அப்பதவியில் நீடிப்பேன்.

எனக்கு அதிகமாக ஓய்வெடுப்பது பிடித்திருக்கிறது. ஆனால் பதவியை ஏற்க பலர் நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

இதர செய்திகள்

– 15வது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியின் எதிரி தேசிய முன்னணி ! – நேரடியாக அறிவித்த முகிதீன்
– முன்கூட்டியே தேர்தலா ? மூன்று விவகாரங்கள் மீது அமைச்சரவை கவலை ?

– கேமரன் மலை உட்பட 12 இடங்களைக் குறி வைக்கும் ம.இ.கா. ?

– பொதுத் தேர்தல் தேதி : அமைச்சரவையில் இரு அணிகளா ?

– பினாங்கில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் !

வேறு யாரும் இல்லாத பட்சத்தில் நெருக்குதல் தொடர்ந்து கொண்டிருந்தால் பிரதமர் பதவியை மீண்டும் ஏற்கலாம். ஆனால் அது ஐந்தாண்டுகளுக்கும் முழுமையாக இல்லாமல் ஓராண்டுக்கு மட்டுமே அப்பதவியில் நீடிப்பேன் என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கூட்டணியின் கீழ் 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கீழ் 2018 முதல் 2020 வரை 22 மாதங்களும் துன் மகாதீர் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply