3 நாடாளுமன்றத் தொகுதிகள், 5 சட்டமன்றத் தொகுதிகளை கோரியுள்ளது மலேசிய மக்கள் சக்தி கட்சி- டத்தோஶ்ரீ தனேந்திரன் [காணொலி]

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 103 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் 3 நாடாளுமன்றத் தொகுதிகள், 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட மலேசிய மக்கள் சக்தி கட்சி விருப்பம் கொண்டுள்ளது என்று அதன் தலைவர் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி தோழமைக் கட்சியாக திகழும் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி பலமுறை கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் பினாங்கு, கெடா, பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகியா ஐந்து மாநிலங்களில் போட்டியிடுவதற்கு 3 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் ஒதுக்குமாறு பரிந்துரை செய்துள்ளோம்.

எங்களின் கோரிக்கையை தேமு தலைமைத்துவம் நிச்சயம் அங்கீகரிக்கும் என நம்பிக்கைக் கொள்வதாக கூறிய டத்தோஶ்ரீ தனேந்திரன், தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதுவரையிலும் அரசாங்கப் பதவிகள் ஏதுமின்றி மக்களுக்கு சேவையாற்றி வரும் விரும்பக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய, வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை களமிறக்க கட்சி எப்போதும் ஆயுத்த நிலையிலேயே உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply