3 மாநிலங்களில் நிலாவை சின்னமாகப் பயன்படுத்தும் தேசியக் கூட்டணி (PN) ?

Uncategorized

 60 total views,  3 views today

– குமரன் –

அலோர் ஸ்டார் – 3 செட்டம்பர் 2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலின்போது, பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணி கிளாந்தான், திரங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் தமது வேட்பாளர்களை நிலா சின்னத்தில் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து பேசிய அதன் தலைவர் முகிதீன் யாசின் தெரிவிக்கயில், அடுத்த வாரம் இக்கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

தற்போது அக்கூட்டணியின் அடையாளமாக இருக்கும் கருநீல நிறம் பாஸ் கட்சியின் ஆதரவாளர்களால் தேசிய முன்னணியின் பிம்பமாக பார்க்கப்படுவதாக பாஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இயக்குநர் சனுசி முகம்மட் முன்னதாகக் கூறியிருந்தார்.

தற்போது அம்மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கும் பாஸ் கட்சியின் வாக்காளர்களுக்கு மிகப் பரீட்சயமாக இருக்கும் அக்கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தும் தீர்வஐ முன்னெடுக்க வேண்டும் என அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தேசியக் கூட்டணி உறுப்புக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு குறித்தும் மிக விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

Leave a Reply