ஊழல் குற்றச்சாட்டில் யாரையும் அரசு பாதுகாக்காது- பிரதமர்

Malaysia, News

 34 total views,  1 views today

கோலாலம்பூர்-

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எந்த தரப்பினரையும் பாதுகாக்கும் போக்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் முழு கடப்பாட்டை கொண்டுள்ளது. அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஊழலில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதற்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளே எடுத்துக்காட்டாகும்.
மேலும், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒருவர் மீது கொண்டு வருவதில் தேர்ந்தெடுக்கும் போக்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Transparency International வெளியிட்ட ஆகக் கடைசியான ஊழல் குறியீட்டில் மலேசியா மேலும் பின்னடைவுக்கு சென்றுள்ளதற்கு ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் குறைவான அரசியல் ஆர்வத்தை கொண்டுள்ளதே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்த குற்றச்சாட்டிற்கு பதலளிக்கையில் டத்தோஶ்ரீ இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

Leave a Reply