உக்ரேய்னின் கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா

News, World

 201 total views,  1 views today

கீவ்-

உக்ரைன் ரஷ்யா இடையில் போர் 7வது நாளை தொட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை இன்று காலை ரஷ்யா பிடித்தது. நகரம் மொத்தத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.


முன்னதாக பெர்டியான்ஸ்க் என்ற நகரத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ரஷ்யா உக்ரைனில் குறி வைத்த பல முக்கிய நகரங்களில் பெர்டியான்ஸ்க், கார்கிவ், கெர்சன் ஆகிய நகரங்களும் அடங்கும். இதில் பெர்டியான்ஸ்க் நகரத்தை நேற்று ரஷ்யா பிடித்தது. இந்த நிலையில்தான் தற்போது உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை பிடித்தது ரஷ்யா. கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை உக்ரைன் அரசும் உறுதி செய்தது.


கெர்சன் என்பது உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்று ஆகும். 2014ல் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவை ஒட்டி இருக்கும் நகரம் ஆகும். இங்கு ரஷ்யா ஆதரவு மக்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ரஷ்ய படைகள் இங்கே வந்த போது அந்த படைகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இங்கு கடந்த 4 நாட்களாக போர் நடைபெற்றது.


நேற்று வடக்கு கெர்சன் நகரை பிடித்த ரஷ்ய ராணுவம் இன்று காலை தெற்கு கெர்சன் நகரையும் பிடித்து மொத்தமாக கைப்பற்றியது. கருங்கடலில் கெர்சன் நகரின் இரண்டு பக்கத்திலும் துறைமுகம் இருக்கிறது. இதனால் கெர்சன் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அளவில் ராணுவ ரீதியாக உதவ கூடிய பகுதியாகும்.

ஐ சேனல் செய்திகள் 2/3/2022

இன்னும் பிற செய்திகள்

Leave a Reply