கல்லுடைப்புப் பணியின்போது விபத்து- இருவர் சிக்கிக் கொண்டனர்

Malaysia, News

 191 total views,  1 views today

ஈப்போ-

சிம்பாங் பூலாய் அருகே உள்ள கல்லுடைப்பு  பணியின்போது நிகழ்ந்த விபத்தில் இரு பணியாளர்கள் கற்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இன்று காலை 9.40 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் அங்கு வேலை செய்து வந்த மேலும் இரு தொழிலாளர்கள் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர்.

கற்களின் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்க STORM எனப்படும் அதிரடி பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட தீயணைப்பு மீட்புப் படையின் முதிர்நிலை அதிகாரி ஜோஹாரி முகமட், அவர்களை மீட்பதற்கு இரு நாட்கள் ஆகலாம் என சொன்னார்.

Leave a Reply