339 5G தலங்கள் அடுத்தாண்டு இறுதியில் நிறைவு பெறும் ! – அன்னுவார் மூசா

Economy, Local, Malaysia, News

 83 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 9/10/2022

சரவாக்கில் 339 5G தலங்கள் அடுத்த ஆண்டு இறுதியில் நிறுவி முடிக்கப்படும் எனக் கூறி இருக்கிறார் தகவல், பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா .  

கடந்த அக். 5 வரையில் கூச்சிங், பிந்துலு, மிரி ஆகிய பகுதிகளில் 90 தலங்கள் முழுமையாக நிறுவப்பட்டு விட்டதகாவும் அவர் சொன்னார்.

இம்மாநிலத்தில் 5G பயன்பாட்டால் இதன் மின்னிலக்கப் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தக் கட்டுமானத்தை சரவாக் எனர்ஜி போன்ற நிறுவனங்கள், அரசு இலாகாக்கள் துணை கொண்டு கண்காணிக்கப்படும் என்றார்.

Leave a Reply