
3,500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளோம்- உக்ரேன்
203 total views, 1 views today
கீவ்-
உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் யாரும் அருகில் உள்ள பிற நாட்டு எல்லைக்கு வர வேண்டாம் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய ஜெட் விமானங்கள் 14 சுட்டு வீழ்த்தி உள்ளோம். இது வரை 3, 500 வீரர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
இதனிடையே, கீவ் நகரை தாக்கிய ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. மேலும் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போரில் இதுவரை 3,500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாபடர்கள், 102 போர் டாங்கிகள் 836 கவச வாகனஙகள்,15 பீரங்கிகளையும் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.