20 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை தருவர்

Uncategorized

 55 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதால் 20 லட்சம் பேர் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் Datuk Seri Nancy Shukri தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக நாட்டின் சுற்றுலா முடங்கி கிடந்தது. இதனால் சுற்றுலா துறை மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்தது.
தற்போது நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில் இதன் மூலம் சுற்றுலா துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு 860 கோடி வெள்ளி வரையிலான பங்களிப்பை செய்ய முடியுமென அவர் சொன்னார்.

Leave a Reply