4 அல்லது 5 தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்கு- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 124 total views,  2 views today

கோலாலம்பூர்-

மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜோகூரில் 4 முதல் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்குக் கொண்டுள்ளது. வாய்ப்பளித்தால் மஇகா அங்கு போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கஹாங், தெங்காரோ, கம்பீர், ஸ்கூடாய் ஆகிய நான்குத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா கஹாங், தெங்காரோ ஆகிய தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இம்முறை மஇகாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர். இது தொடர்பில் ஜோகூர் மாநில முதல்வர் ஹஸ்னி முகமட்டுடன் கலந்தாலோசிக்கப்படுவதோடு தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடியுடன் போட்டியிடக்கூடிய தொகுதிகள் குறித்து விவாதிக்கப்படும்.
வாய்ப்பளிக்கப்படுகிறது என்பதற்காக மட்டும் மஇகா கண்மூடித்தனமாக போட்டியிடாது. மஇகாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும். வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு பயனும் இல்லை என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மேலும் சொன்னார்.

Leave a Reply