400 உறுப்பினர்கள் வெளியேறினரா ? – மறுக்கும் ம.இ.கா. தம்பூன் தொகுதி

Malaysia, News, Politics

 47 total views,  1 views today

– குமரன் –

தம்பூன் – 5/11/2022

ம.இ.கா. தம்பூன் தொகுதியில் இருந்து 400 உறுப்பினர்கள் வெளியேறி பிகேஆர் கட்சியில் இணைந்ததாகக் கூறப்படும் தகவல் உண்மையில்லை எனவும் ஒரு சிலரே வெளீயேறியதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

அவ்வெண்ணிக்கை சரியில்லை எனக் கூறிய ம.இ.கா. தம்பூன் தொகுதி தலைவர் முனியாண்டி, நேற்று இரவு நடந்த பிகேஆர் கட்சி உறுப்பினர் பதிவு பாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் ம.இ.கா. தம்பூன் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் ஒரு சிலரே இருந்ததாகவும் கூறினார்.

அவர்களில் பலரைத் தமக்குத் தெரியாததற்குக் காரணம் ம.இ.கா.வில் பதிவு செய்து விட்டு கட்சிப் பஅணியில் முழுதாய் ஈடுபடாதவர்களாக இருந்ததாகவும் முனியாண்டி தெரிவித்தார்.

பலர் தம்பூன் தொகுதி வாக்காளர்களே கிடையாது. நீக்கப்பட்டக் கிளையில் இருந்து சிலர் பிகேஆர் கட்சியில் இணைந்திருப்பதாகவும் கூறிய அவர், இவ்விவகாரம் குறித்து தாம் விசாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply