43 இந்து ஆலயங்களுக்கு மானியம்- கணபதிராவ் வழங்கினார்

Malaysia, News, Uncategorized

 240 total views,  3 views today

ஷா ஆலம்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 43 இந்து ஆலயங்களுக்கு 3 லட்சத்து 93 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இரண்டாம் கட்ட மானிய ஒதுக்கீட்டுக்கான காசோலை இன்று வழங்கப்பட்டது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான வருடாந்திர மானியம் இவ்வாண்டும் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்து ஆலயங்களுக்கு 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


கடந்த ஏப்ரல் மாதம் 63 இந்து ஆலயங்களுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மானிய ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இன்று 43 ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன நிலையில் ஆகஸ்ட் மாதம் வரையிலும் அங்கீகரிக்கப்பட்ட எஞ்சிய 54 ஆலயங்களுக்கான காசோலை கட்டங்கட்டமாக வழங்கப்படும்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலும் 17 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மானிய ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று கூறிய கணபதிராவ், முறையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கப்பட்ட ஆலயங்களுக்கு மட்டுமே மானிய ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Leave a Reply