500 கிலோ குருணை அரிசியில் மாபெரும் செம்பரத்தை மலர் வடிவக் கோலம் ! – நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 132 total views,  2 views today

– குமரன் –

செத்தியா ஆலாம் (ஷா ஆலாம்) – 5 செட்டம்பர் 2022

500 கிலோ குருணை அரிசியில் 38 அடி நீளத்தில் மலேசியாவின் செம்பரத்தை மலர் வடிவிலான வண்ணக் கோலத்தை போட்டு Jelajah Merdeka தேசிய நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் செத்தியா ஆலாமில் இருக்கும் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி.

பள்ளியின் அவை கூடல் வளாகத்தில் ஏறத்தாழ 3 மணி நேர முயற்சிக்குப் பிறகு 28 ஆசிரியர்களும் 483 மாணவர்களும் இணைந்து இந்த மாபெரும் செம்பரத்தைக் கோலத்தை உருவாக்கினர் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுராதா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அருகில் உள்ள தாமான் கிள்ளான் உத்தாமா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் துணைத் தலைமை ஆசிரியர்களும் சிறப்பு வருகை புரிந்திருந்தனர்.

மாணவர்களிடத்தில் தேசப் பற்றும் மட்டும் இல்லாமல் ஒற்றுமையையும் விதைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அனுராதா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், இதரப் பணியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் உட்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய – பங்கெடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் அனுராதா நன்றியைத் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளியும் தொடர்ச்சியான தமிழ்க்கல்வியும் நமது முதன்மைத் தேர்வு !

Leave a Reply