
500 மரக்கன்றுகளை நடும் இலக்கை எட்டியது செந்தோசா சட்டமன்றத் தொகுதி
357 total views, 1 views today
கிள்ளான் –
கிள்ளான், செந்தோசா பகுதியை தூய்மையாகவும் பசுமையாகவும் என்றும் காட்சியளிப்பதற்கு ஏதுவாக 500 மரக்கன்றுகளை நடவு செய்யும் இலக்கை செந்தோசா சட்டமன்றத் தொகுதி எட்டியது.
இத்தொகுதி முழுவது 500 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று அதன் இலக்கு எட்டப்பட்டது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.
செந்தோசா பகுதியை பசுமையும் தூய்மையும் நிறைந்த பகுதியாக உருமாற்றும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதோடு மழைக்காலங்களில் பெருவெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் மரக்கன்றுகள் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடவு செய்யப்பட்டுள்ள இந்த மரக்கன்றுகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்கு கண்காணிக்கப்டும் எனவும் இன்னும் கூடுதல் மரங்களை நடவு செய்ய சிலாங்கூர் மாநில அரசிடம் கூடுதலாக 500 மரக்கன்றுகள் கோரப்படும் என்றும் குணராஜ் கூறினார்.
இந்த மரக்கன்றுகள் நடவு செய்யும் நிறைவு நிகழ்ச்சியில் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் மாட் சாபு, சிலாங்கூர் மாநில சுற்றுலா, இயற்கை வள ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் ஆகியோர் உட்பட கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள், ஆதரவாளர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.