500,000 வங்காளதேச தொழிலாளர்களை தருவிப்பதை நிறுத்துக – MTUC (Video News)

Malaysia, News

 268 total views,  3 views today

கோலாலம்பூர் – 12 ஏப்பிரல் 2022

500,000 வங்காளதேச தொழிலாளர்களை நாட்டுக்குள் தருவிக்கும் முடிவை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று MTUC எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.

இம்மாத தொடக்கத்திலிருந்து 5 லட்சம் வங்காளதேச தொழிலாளர்கள் மலேசியாவுக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாய உடல் உழைப்பு தொழில்துறைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தருவிப்பது ஊக்குவிக்கும் என்பதோடு இதனால் இங்கு வேலை செய்து வரும் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி இங்குள்ள நிறுவனங்களும் மூடப்படும் அச்சத்தையும் எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் Kamarul Baharin Mansor குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிப்பதை காட்டிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சியும் அவர்களை கவர கூடுதல் ஊதியமும் வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply