584 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிநிதி வழங்கினார் கணபதிராவ்

Malaysia, News, Politics

 20 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 584 மாணவர்களுக்கு உயர்கல்வி நிதிக்கான காசோலையை வழங்கினார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்.

2.5 மில்லியன் தொகையிலான இந்த உதவிநிதி உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பிடிபிடிஎன் கடனுதவியை தவிர்த்து எஞ்சிய தொகையை செலுத்துவதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

மாணவர்களின் கல்வி
வளர்ச்சிக்காக மாநில அரசாங்கத்தின் மானியத்துடன் பொங்கல், தீபாவளி போன்ற பாரம்பரிய நிகழ்வுகளின் செலவீனங்களை கட்டுப்படுத்தி இந்த மாணவர்களுக்கான கல்வி உதவிநிதி வழங்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply