7 அம்சக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார் தீபக்

Malaysia, News, Politics

 124 total views,  1 views today

கிள்ளான் –

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை  வேட்பாளராக களமிறங்கும் தீபக் ஜெய்கிஷன்  தனது 7 அம்ச தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மோதிரம் சின்னத்தின் கீழ் தீபக் ஜெய்கிஷன் போட்டியிடுகிறார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசிடமிருந்து நிவாரணம், வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அவசர படையை உருவாக்குவது, 1000 தன்னார்வலர்களுடன் 20 மீட்புப் படகுகளை தயார்படுத்துவது, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, கிள்ளான் வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது, கல்வி மானியம், வரலாற்று பாரம்பரியங்களை பாதுகாப்பது, கிள்ளான் மக்களின் சமூக மேம்பாட்டை உறுதி செய்வது, பெண்களுக்கான மேம்பாடு, முதியோருக்கான மேம்பாடு ஆகிய கூறுகளை உள்ளடக்கிய 7 அம்சத் திட்டங்களை தீபக் ஜெய்கிஷன் அறிவித்தார்.

தாம் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் செயலாக்கம் காணும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply