7 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் டிமான்ட்டி காலனி-2?

Cinema, News

 524 total views,  3 views today

சென்னை-

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்பிறகு அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது. அந்த அளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply