71 ஆலயங்களுக்கு வெ.670,000 மானியம் வழங்கப்பட்டது

Malaysia, News

 114 total views,  4 views today

ரா. தங்கமணி

ஷா ஆலம் – 19 ஆகஸ்டு 2022

சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்திருந்த இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டு தலங்களுக்கான உதவித் தொகையில் முதற்கட்டமாக 71 இந்து ஆலயங்கள் வெ.670,000ஐப் பெற்றுக் கொண்டன.

சிலாங்கூர் மாநில அரசின் இந்த உதவித் தொகைக்கு 150 ஆலய நிர்வாகங்கள் விண்ணப்பம் செய்திருந்தன என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.

இதில் 71 ஆலயங்களுக்கு முதற்கட்ட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 11 ஆலயங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கின்றன. 19 ஆலயங்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 39 ஆலயங்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளன. எஞ்சிய 10 ஆலயங்களின் விண்ணப்பங்கள் முறையான ஆவணங்கள் இணைக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

ஆலயங்களின் மேம்பாட்டுத் திட்டங்கள், சீரமைப்புப் பணிகள் உட்பட சமூக, சமய நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாநில அரசு ஒதுக்கீடு செய்த இந்த உதவித் தொகையை வழங்குவதில் எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது என்று கணபதிராவ் கூறினார்.

நேற்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் சம்பந்தப்பட்ட ஆலயப் நிகராளிகள் தங்களுக்கான காசோலையைப் பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply