76 ஆண்டுகள் ஆர்டிஎம் கொண்டாட்டம் ! – டத்தோ ஶ்ரீ மு சரவணன் வாழ்த்து !

Malaysia

 213 total views,  1 views today

மலேசிய வானொலி தொலைக்காட்சி தினம் – ஏப்ரல் 1

ஏப்ரல் 1, தனது 76ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மலேசிய வானொலி தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

1946ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட  மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம்,  அரசாங்கத்தின் கொள்கைகளையும், தகவல்களையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்காற்றி வருகிறது.

அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள், நலத்திட்டங்கள், தகவல்கள், செய்திகள் என அனைத்தையும் மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைப்பதில் மலேசிய வானொலி தொலைக்காட்சியின் பங்கு அளப்பரியது.

குறிப்பாக இந்தியப் பகுதி… வானொலியாகட்டும், தொலைக்காட்சி செய்தியாகட்டும், வசந்தம் நிகழ்ச்சியாகட்டும்.. அனைத்துமே இந்திய சமுதாயத்தின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. இந்திய சமுதாயத்தின் உயிர்த் துடிப்பாக ஆர்டிஎம் விளங்கிவருகிறது.

24 மணி நேரமும் நேயர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் மின்னல் பண்பலை, தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது என்றால் மிகையாகாது. சரியான தமிழும், முறையான உச்சரிப்பும் மின்னலின் உயிர் நாடி.  அதற்கு வித்திட்ட மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள், இன்னாள் பணியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

தொடர்ந்து சிறப்பான முறையில், நிறைவான தகவல்களோடு பீடுநடை போட வேண்டும்.

நன்றி வணக்கம்.

Leave a Reply