8 மாதக் குழந்தையைக் கொன்றதாக தாதியர் மீது குற்றச்சாட்டு !

Crime, Malaysia, News

 218 total views,  2 views today

பெட்டாலிங் ஜெயா – 1 ஆகஸ்டு 2022

தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த தாதியர் ஒருவர் எட்டு மாதக் குழந்தையைக் கொன்றதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுங்கை சிப்புட் மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இது வரையில், குற்றஞ்சாட்டப்பட்ட தி ரெபெக்கல், 30 வயது. குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இது கொலை வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தின்கீழ் வருகிறது.

மலாய் மொழியில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட வழக்கு விவரம் தமக்குப் புரிந்ததாக தலை அசைத்து ரெபக்கல் உறுதிப்படுத்தியதாக மெட்ரோ செய்தி நிறூவனம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த ஜூலை 24 ஆம் நாள், மாலை 6.00 மணி அளவில் சுங்கை சிப்புட் கம்போங் முகிபாவில் உள்ள ஒரு வீட்டில் ஜெ மெல்வின் ஜேஷுரன் எனும் குழந்தையை ரெபக்கல் கொலை செய்ததாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கின்றது.

இந்தக் கொலை உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவியல் தடுப்புச் சட்டம் 302இன் படி கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் நீதிபதி நுருல் ஆஷிஃபா ரெட்ஸுவான், பிணை விடுவிப்பு இல்லாமல் ரெபக்கல் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதோடு அடுத்த விசாரணை அக்தோபர் மாதம் 3 ஆம் நாள் முடிவு செய்தார்.

Leave a Reply