8 மாதங்களாக ஊதியம் பெறாத பாலர்பள்ளி ஆசிரியர்கள்? எம்ஏபி நாகேஷ் சாடல்

Malaysia, News

 166 total views,  1 views today

நக்கீரன்

ஈப்போ

பாலர் பள்ளிகளில் பணிபுரியும் 294 உதவியாளர்களுக்கும் 192 ஆசிரியர்களுக்கும் கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லல் படுகின்றனர் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) பேராக் மாநில பொறுப்பாளர் நாகேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய நிலையில் ‘சைல்ட்’ அமைப்பின் சார்பில் 68 பாலர் பள்ளிகள், தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் 16 பாலர் பள்ளிகள், மலேசிய இந்து சங்கம் நடத்தும் 17 பாலர் பள்ளிகள், பிஜிடி என்னும் ‘பெர்சத்துவான் குரு-குரு தடிக்கா’- வழிநடத்தும் 84 பாலர் பள்ளிகள், பிபிபிகேசி எனப்படும் பெர்துபோஹான் பூசாட் பெம்பாங்குனான் கானாக்-கானாக் செமர்லாங் கீழ் இயக்கும் 46 பாலர் பள்ளிகள் ஆகியவை தனியார் பாலர் பள்ளிகளாக செயல்படுகின்றன.

இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களும் உதவியாளர்களும்தான் கடந்த எட்டு மாதங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மித்ராவின் அலட்சியத்தாலும் மஇகா-வின் பாராமுகத்தாலும் ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமாவின் புறக்கணிப்பாலும்தான் இந்த நிலை எழுந்துள்ளது.

நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு நிலைக்கு ஆட்பட்டுள்ள நிலையில், இந்தப் பாலர்ப் பள்ளிகளில் பணியாற்றிவரும் அனைவரும் பி-40 தரப்பைச் சேர்ந்தவர்கள். 6,469 பிஞ்சு மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் கல்விப் பயணத்திற்கு அடித்தளம் இடும் இந்த பாலர் பள்ளி ஆசிரியர்களை அனைத்துத் தரப்பினரும் கைவிட்டது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்று கி.நாகேஷ் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply