8 முனைப் போட்டியில் புந்தோங் சட்டமன்றத் தொகுதி?

Malaysia, News, Politics, Polls

 103 total views,  2 views today

இரா.தங்கமணி

ஈப்போ – 15/10/2022

வரும் 15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பேரா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா? என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது.

பேரா சட்டமன்றமும் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலோடு மாநில தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள நிலையில் அனைவரின் கவனமும் பெற்றுள்ள தொகுதியாக புந்தோங் சட்டமன்றத் தொகுதி திகழ்கிறது.

அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட புந்தோங் தொகுதியில் இம்முறை 8 முனைப் போட்டி நிகழலாம் என கணிக்கப்படுகிறது.

மஇகா, ஜசெக, பெர்சத்து, வாரிசான், பிபிபி உட்பட சில சுயேட்சை முகங்களும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணி சார்பாக மஇகா பிரதிநிதிகள் அங்கு போட்டியிடவுள்ளனர். இந்த போட்டியில் பேரா மாநில மஇகா துணைத் தலைவர் ஜெயகோபி, பேரா மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவர் தியாகசீலன், முனைவர் சேகர் நாராயணன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

கடந்த மூன்று தவணையாக இத்தொகுதியை தற்காத்து வரும் ஜசெக சார்பாக ஐவரின்  பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன என்று நம்பப்படுகிறது. புந்தோங் சட்டமன்றத் தொகுதி ஜசெக ஒருங்கிணைப்பாளர் திருமதி பவாணி (ஷாஷா), குமாரி துளசி மனோகரன் உட்பட இன்னும் மூவரின் பெயர்கள் பெயர் பட்டியல் உள்ளது.

இருதயம் செபஸ்தியன்

பிபிபி கட்சியின் சார்பாக இருதயம் செபஸ்தியன், வாரிசான் கட்சியின் சார்பாக ஜெயசீலன், பெர்சத்து கட்சியின் சார்பாக ஆதி.கணேசன் ஆகியோர் போட்டியிடக்கூடும் என கணிக்கப்படுகிறது.

இவர்களோடு சேர்த்து இன்னும் சில சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Leave a Reply