98 தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 லட்சம் மானியம் வழங்கியது சிலாங்கூர் அரசு

Malaysia, News, Politics

 177 total views,  2 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 98 தமிழ்ப்பள்ளிக்களுக்கு வெ.50 லட்சம் நிதியுதவி வழங்கியது சிலாங்கூர் மாநில அரசு.

மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற மானிய ஒப்படைப்பு நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இம்மானியங்களை வழங்கினார்.

இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின்  மேம்பாட்டு வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இம்மானியம் பள்ளிகளின்  விண்ணப்பங்களுக்கு ஏற்ப முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கணபதிராவ் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி உதவி நிதி, பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டணம் ஆகியவையும் வழங்கி வருகிறது.

இந்திய மாணவர்கள், தமிழ்ப்பள்ளிகளின் நலன் காக்கப்படுவதிலிருந்து  சிலாங்கூர் மாநில அரசு ஒருபோதும் தவறியதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

Leave a Reply