BINGKAS திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் வெ.300 உதவித் திட்டம்

Malaysia, News

 380 total views,  1 views today

ஷா ஆலம்-

பெருந்தொற்றுக்குப் பிறகான வாழ்க்கைச் சவால்களைச் சந்திக்க ஏதுவாக BINGKAS எனப்படும் சிலாங்கூர் மாநில நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்கும் என சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து தகவல் அளித்த சிலாங்கூர் மாநில சமூக நல, சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறுகையில், Kasih Ibu Smart Selangor – KISS என்றழைக்கப்பட்டு வந்த இப்போதைய BINGKAS திட்டத்தில் இந்த உதவியைப் பெறுவோர் எண்ணிக்கையை 25,000 இல் இருந்து 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2019 முதல் 2021 வரையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இத்திட்டத்திற்குத் தகுதி பெறும் தாய்மாரை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் சொன்னார்.


முந்தைய ஆண்டுகளில் தகுதி பெற்றும் உதவித் திட்டம் கிடைக்காதவர்கள் இம்முறை அந்த உதவியைப் பெறுவர் என்றும் தகுதி விதிமுறைகளை நிறைவு செய்யாதவர்கள் அப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் எனவும் கணபதிராவ் விளக்கினார்.


கடந்த டிசம்பர் 2021இல் 18,685 பேர் KISS உதவியை பெற்றதாகவும் அவர்களில் 2,372 பேர் தனித்து வாழும் தாயார் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

Leave a Reply