
IMDb-இல் முதலிடம் பிடித்தது ‘ஜெய் பீம்’
335 total views, 1 views today
சென்னை-
த.செ.ஞானவேல் இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் உலக ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சாதீய பாகுபாட்டால் பல்வேறு சர்ச்சைகள் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெய் பீம்.
இந்திய திரைப்பட வரலாற்றில் ‘ஜெய் பீம்’ நிகழ்த்தியிருக்கும் இச்சாதனை ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண: