
#KerajaanGagal வீதிப் போராட்டம் பெரும்பரப்புரையாக மாற்றப்படுகிறதா ?
233 total views, 1 views today
கோலாலம்பூர் – 19 ஆகஸ்டு 2022
தோல்வி அடைந்த அரசாங்கம் எனக் கூறி #KerajaanGagal எனும் அமைதி மறியல் பெரும் பரப்புரையாக மாற்றப்படுவதாக அதன் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
நாளை பிற்பகல் 3.00 மணி அளவில் நாடு முழுவதும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“Mengambil semangat musyawarah bersama rakan-rakan aktivis yang menggerakkan himpunan #KerajaanGagal, pihak sekretariat bersetuju mengambil pendekatan baharu dengan melancarkan kempen besar-besaran terhadap kegagalan pemerintah,”
நாட்டை நிர்வகிப்பதில் தற்போதைய அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதாக நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நோக்கத்தில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அக்குழுவினர் கூறுகின்றனர்.
நாட்டின் அரசியல் மாற்றம் நேர்ந்த பொழுது, குறிப்பாக தான் ஶ்ரீ முகிதீன் யாசின் பிரதமராகப் பதிவு வகிக்கத் தொடங்கியபோது இந்தப் பரப்புரை சமூக ஊடகங்களில் வைரலானது.
பொருட்களின் விலை அதிகரிப்பு உட்பட பல கூறுகளில் நாட்டை நிர்வகிப்பதில் தற்போதைய அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டும் இப்போராட்டம் நாளை நடைபெற இருப்பதாக கடந்த 12 ஆம் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.
