M40 பிரிவினரில் 20% பி40 பிரிவினராக மாற்றம்

Uncategorized

 343 total views,  1 views today

புத்ராஜெயா –

மாதந்தோறும் 4ஆயிரம் வெள்ளி முதல் 10 ஆயிரம் வெள்ளி வரை வருமானம் கொண்டிருந்த எம்40 பிரிவினரில் 20 விழுக்காட்டினர் பி40 பிரிவினராக மாறியுள்ளனர் என்று மலேசிய புள்ளியியல் துறை குறிப்பிட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக T20 எனப்படும் உயர் வருமான பிரிவினரில் 12.8 விழுக்காட்டினர் எம்40 பிரிவாக வீழ்ந்துள்ளனர் என்று தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஶ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார்.
கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட 7,901 ஒப்பிடுகையில் சராசரி மாதாந்திர மொத்த குடும்ப வருமானம் கடந்தாண்டு 10.3 விழுக்காடு குறைந்து 7,089 வெள்ளியாக சரிவு கண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply