MIC-க்கு பதிலாக MMSP? அம்னோ போடும் புதுக்கணக்கு

Malaysia, News, Politics

 277 total views,  2 views today

கோலாலம்பூர்-

மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகாவுக்கு மாற்றாக மலேசிய மக்கள் சக்தி கட்சியை உருவாக்க அம்னோ முனைகிறதா? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவத்திற்கான ஆதரவு தொடர்பில் மஇகாவுக்கும் அம்னோவுக்கும் இடையே உச்சகட்ட மோதல் வலுத்தது.


பெரிக்காத்தான் நேஷனலுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்ட போதிலும் அக்கூட்டணிக்கான ஆதரவு தொடரும் என்று மஇகாவின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்தார்.

அம்னோவுக்கும் மஇகாவுக்கும் இடையில் நீடித்த அண்மைய கால அறிக்கை போரின் விளைவாக தேசிய முன்னணி கூட்டணியில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிப்பதற்கு புதிய கட்சியை அம்னோ தேர்ந்தெடுக்கலாம் என்று சில காலமாக ஆருடங்கள் வலுத்து வந்தன.


அதன் உச்சகட்டமாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் பின்னணியில் மஇகாவுக்கு மாற்றாக மலேசிய மக்கள் சக்தி கட்சியை கொண்டு வர அம்னோ திட்டம் வகுத்து செயல்படுவதாக சந்தேகக் கனல் பலரிடத்தில் எழுந்துள்ளது.


இந்தியர்களின் நம்பிக்கையை பெற மாற்றுக் கட்சி தேமுவில் அவசியம் என்பதோடு அண்மைய கால அறிக்கை போருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மலேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பை அம்னோ கையெலெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply