MMSP கட்சிக்கு தொகுதிகள்; பொறாமை கொள்ளவோ தடுக்கவோ மஇகா முயற்சிக்காது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 262 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தேசிய முன்னணி கூட்டணியின் கீழ் மலேசிய மக்கள் சக்தி போட்டியிடுவதில் மஇகாவுக்கு எந்தவோர் ஆட்சேபணையும் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேமு கூட்டணியின் கீழ் மஇகா போட்டியிட தொகுதிகளுக்கு இடையே எந்தவொரு மோதலும் ஏற்படாத வரையிலும்  பிரச்சினை இல்லை. இது குறித்து தேர்தல் காலத்தில் விவாதித்துக் கொள்ளலாம்.

பிற கட்சிகள் போட்டியிடுவதில் பொறாமை கொள்ளவோ அவற்றை தடுக்கவோ மஇகா  முயற்சிக்காது.

மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு தொகுதிகள் வழங்கப்படும் என்று அம்னோ சார்பில் அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறியுள்ளார். ஆனால் இது குறித்து தேமு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

முதலில் தேமு கூட்டத்தில் விவாதிக்கட்டும். பிறகு அது குறித்து பேசலாம் என்று இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply