
’No DAP, No Anwar’ தேர்தலுக்கு பிந்தியது அல்ல- ஸாயிட்
84 total views, 1 views today
கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஜசெகவை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி ஏற்படுத்திக் கொண்ட ஒத்துழைப்பு ஒருபோதும் கட்சியின் அடையாளத்தை இழக்காது, அதன் கொள்கைகளை புறக்கணிக்காது என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
ஜசெக, பிகேஆர், பெர்சத்து ஆகியவற்றுடன் எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிப்பது என்பது 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதே தவிர தேர்தலுக்கு பிந்தியது அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.