Pendamik-இல் இருந்து Endamik-இல் நுழையும் மலேசியா

Malaysia, News

 570 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றால் Pendamik நிலையிலிருந்து Endamik கட்டத்திற்குள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மலேசியா நுழைவதாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.
Endamik கட்டத்திற்குள் தள்ளப்படும் நிலையில் நடப்பில் அமலில் உள்ள சில எஸ்ஓபி நடைமுறைகளிள் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
வர்த்தக நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாடு முற்றிலும் அகற்றப்படுகிறது. இதன்வழி நள்ளிரவு தாண்டியும் செயல்படக்கூடிய உணவகங்களில் மக்கள் உணவருந்தலாம்.
அதோடு மக்கள் ஒன்றுகூடல், நிகழ்ச்சிகளில் மக்களின் எண்ணிக்கை கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. மாநிலம் கடந்து பயணிக்கக்கூடிய நிலையில் ஒருவரின் தடுப்பூசிக்கான தகுதி இனி நிபந்தனையாக முன்வைக்கப்படாது.
மேலும், முகக் கவசம் அணிவது, மைசெஜாத்ராவில் வருகையை பதிவு செய்வது, ஆகிய நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என இன்று நேரலையில் சிறப்புரையாற்றிய பிரதமர் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.
ஏப்ரல் 1 முதல் நாடு Endamik கட்டத்திற்குள் நுழைவதால் அனைத்துலக எல்லைகள் திறக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

Leave a Reply