
Revnesh Kumar மரணத்திற்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல
497 total views, 1 views today
கோலாலம்பூர்-
மாணவர் Revnesh Kumar மரணத்திற்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
13 வயதான மாணவர் Revnesh Kumar கடந்த ஜனவரி 16ஆம் தேதி கராத்தே வகுப்பு சென்றுக் கொண்டிருந்தபோது வாந்தி எடுத்தபின் மயங்கி விழுந்தார். காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட பின்னர் அங்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
Revnesh Kumar-இன் சவப் பரிசோதனை பூர்வ அறிக்கையை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட அவரின் தாயார் விஜயராணி கோவிந்தன், Revnesh Kumar-இன் மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவரது உடல் உறுப்புகள் நன்றாகவே இருந்துள்ளன. தடுப்பூசியினால் அவரது உடல் பாதிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சொன்னார்.
சவப் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு மேலும் ஒரு வாரம் பிடிக்கும் எனவும் முழுமையான அறிக்கை கிடைப்பதற்கு சில காலம் ஆகும் எனவும் மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக அவர் மேலும் சொன்னார்.
மரணமடைவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக Revnesh Kumar கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்பது. குறிப்பிடத்தக்கது.