Revnesh Kumar மரணம்; சுயேட்சை விசாரணை தேவை- சார்ல்ஸ்

Malaysia, News

 293 total views,  4 views today

கோலாலம்பூர்-

தமது மகன் Revnesh Kumar மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என குறிப்பிடப்பட்டிருக்கும் சவப்பரிசோதனை அறிக்கை  முடிவை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அவரது தாயார் விஜயராணி கோவிந்தன் குறிப்பிட்டார்.

அந்த சவப் பரிசோதனை அறிக்கையில் தனது மகனின் இறப்புக்கான காரணத்தை குறிப்பிட தவறியிருப்பதால் அந்த அறிக்கை முடிவு தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று விஜயராணி கூறினார்.

இதனிடையே,  சுகாதார அமைச்சு வெளியிட்ட பூர்வாங்க Revnesh Kumar-இன் சவப் பரிசோதனை அறிக்கையை சுயேட்சை அமைப்பு மறுஆய்வு செய்ய வேண்டுமென விஜயராணி கேட்டுக் கொண்டிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

 தனது மகனின் சவப்பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்ள காஜாங் மருத்துவமனைக்கு சென்ற விஜயராணியை, அந்த சவப் பரிசோதனை அறிக்கையை ஏற்றுக் கொள்ள  வைக்க மருத்துவர்கள் முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த சவப் பரிசோதனை அறிக்கை தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை, மகனின் இறப்பு குறித்து தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதியான பதில் கிடைக்க சுயேட்சை விசாரணை தேவை என்று சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

Leave a Reply