RUU 355; இட்ரிஸ் அஹ்மாட்டின் உறுதிமொழியை மலேசியர்கள் நம்பவில்லை- லிம் குவான் எங்

Malaysia, News

 228 total views,  1 views today

கோலாலம்பூர்-

இஸ்லாம் அல்லாதோர் மத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா 355ஆல் இஸ்லாம் அல்லாதோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நேற்று மக்களவையில் முன்மொழிந்த பாஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் இட்ரிஸ் அஹ்மாட் வழங்கியுள்ள உறுதிமொழியை மலேசியர்கள் நம்பவில்லை. முஸ்லீம் அல்லாதவர்களுக்கான மிதமான, சகிப்புத்தன்மையை கொண்டிருந்த மறைந்த பாஸ் தலைவர் மதக்குரு நிக் அஸிஸ் கடைபிடித்து வந்த கொள்கையிலிருந்து விலகியுள்ள பாஸ் கட்சி, முஸ்லீம் அல்லாதோரிடம் விரோதப் போக்கைக் கொண்டிருப்பதாக ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

மேலும், தீவிரவாத முத்திரையுடன் ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ள தலிபான் அமைப்புக்கு பாஸ் கட்சி ஆதரவளித்து சிறப்பிக்கிறது. அங்கு பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய மசோதா முஸ்லீம்களுக்கு மட்டுமே அமலாக்கம் செய்யப்படும் என்று இட்ரிஸ் அஹ்மாட் கூறுவது, முஸ்லீம் அல்லாதோருக்கு எதிராக பொய்களையும், அவமதிப்பு, அவதூறான கருத்துகளையும் பரப்பும் மத வெறியர் ஸாகீர் நசோஹா ஆற்றிய முஸ்லீம் அல்லாதோருக்கு எதிரான உரையைதான் நினைவூட்டுகிறது.

பாஸ் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டங்கள் கூட்டரசு அரசியலமைப்பை மீறுகின்றனவா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படும். இந்த சட்டங்களை அரசாங்கம் முன்மொழிய விரும்புகிறது என்ற கருத்தை இதற்கு முன்பு மறுத்த சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டியின் உத்தரவாதங்கள் எங்கே?வான் ஜுனாய்டி இதனை தெளிவுப்படுத்த வேண்டும், அதோடு சபா, சரவாக் மாநில அரசுகள் பாஸ் கட்சியின் இந்த திட்டத்திற்கு வெளிப்படையான தங்களின் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply