SUKIPT : தேசிய சாதனையை முறியடிப்பவர்களுக்கு ரிம 20,000 வெகுமதி ! – பிரதமர் அறிவிப்பு

Malaysia, Malaysia, News, Sports

 81 total views,  2 views today

தஞ்சோங் மாலிம் – 15 ஆகஸ்டு 2022

SUKIPT எனப்படும் உயர்க்கல்விக் கூடங்களுக்கு இடையேயான விளையாட்டில் தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்கும் விளையாட்டாளருக்கு ரிம 20,000 வெகுமதி வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

இதே சவாலை அவர் மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கும் விடுத்துள்ளார்.

நேற்று இரவு தஞ்சோங் மாலும் உப்சி பல்கலைக்கழகத்தில் SUKIPT போட்டியை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்த போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 இதனால், அதிகமான உயர்க்கல்விக் கூட விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 21 ஆம் தேதி வரை 21 வகையானப்ம் போட்டிகளில் நாட்டின் 66 உயர்க்கல்விக் கூட மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply